ஜனாதிபதி  கொலை சதி திட்டம் தொடர்பான தொலைபேசி உரையாடலில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களில் 123 ஒலிப்பதிவுகள்  கொலை சதி திட்டம் தொடர்புடன் சம்பந்தப்பட்டுள்ளது. 

இதனை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

 நீதிமன்றத்தின் அனுமதியுடன்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.