எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக தற்காப்பு வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக, இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் விளையாட்டுக் குழு மற்றும் அக் குழுவின் அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை, விளையாட்டுத்துறை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

 

இதன்போது, 2014 ஆம் ஆண்டு தற்காப்பு  வெற்றிக்கிண்ணத்தை, இலங்கைக்கு சுவீகரித்துக் கொடுத்ததை அமைச்சரிடம் பெருமையுடன்  ஞாபகமூட்டினர். இம்முறையும், இவ்வெற்றிக் கிண்ணத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்குத் தேவையான அதிக பட்ச அனைத்து  முயற்சிகளை எடுத்திருப்பதாகவும், விளையாட்டுக் குழு இதன்போது  அமைச்சரிடம் நம்பிக்கையோடு எடுத்துரைத்தனர்.

 

இச் சந்தர்ப்பத்தில், 2018 ஆம் வருடத்தின் தற்காப்பு  வெற்றிக் கிண்ணத்தை,  இலங்கைத் திரு நாட்டுக்குக்  கொண்டு வருவதற்காக, அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லும் விளையாட்டுக் குழுவுக்கும், அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களத்  தெரிவித்துக் கொண்டார்.