இந்தியாவில், தமிழகத்தின் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் – சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட்சுமி (13) என்ற மகள் உள்ளார்.

துறுதுறுவென இருக்கும் ராஜலட்சுமியிடம் அருகில் வசிப்பவர்கள் கேலி கிண்டல் செய்து ஜாலியாக விளையாடுவார்கள். அப்படி தான் கார்த்தி (27) என்ற இளைஞரும் கிண்டல் செய்தார். ஆனால் நாளடைவில் சிறுமியை சீண்ட தொடங்கினார் கார்த்தி.

நேற்றிரவு 8 மணிக்கு சாமுவேல் வீட்டுக்குள் கார்த்தி நல்ல போதையில் நுழைந்தார். பின் சிறுமி ராஜலட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து சிறுமி அலறிய நிலையில் அங்கு வந்த அவர் தாய் கார்த்தியை தடுக்கவே, அவரை கீழே தள்ளிய கார்த்தி ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் ராஜலட்சுமியின் கழுத்தை தனியாக துண்டித்து எடுத்தார்.

பின்னர் தலையை கையில் எடுத்து கொண்டு தெருவில் நடந்து வந்த கார்த்தியை, அவரின் மனைவி பிடித்து பொலிஸாரிடம்   ஒப்படைத்தார்.

இதனையடுத்து கார்த்தி மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் சாலை நடுவே இருந்த சிறுமியின் தலை, மற்றும் வீட்டில் கிடந்த உடல் இரண்டையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவமானது, அப்பகுதியினரிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.