உணவு விசமாகியதன் காரணமாக ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரின் ஆசிரிய மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கல்வியியற் கல்லூரில் கல்வி கற்கும் சுமார் 70 க்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் உட்கொண்ட உணவு விசமாகியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விசமடைந்ததன் காரணமாக சிலருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை 8 மணியளவில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த  உணவு விசமானமை எவ்வாறு  என்பது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.