சவூதியுடன் சமரசத்துக்கு இடமில்லை - துருக்கி

Published By: Vishnu

23 Oct, 2018 | 11:26 AM
image

சவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கஷோக்கி துருக்­கி­யி­ன் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூத­ர­கத்­திற்குள்  பிர­வே­சித்தவேளை காணாமல் போயி­ருந்த நிலையில்  அவர் அந்தத் தூத­ர­கத்­திற்குள் வைத்துப் படு­கொலை செய்­யப்­பட்­ட­தற்­கான சான்­றுகள் தம்­மிடமுள்­ள­தாக துருக்­கிய அதி­கா­ரிகள் ஏற்­க­னவே உரிமை ­கோ­ரி­யி­ருந்ததுடன், சவூதி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கருத்­து­க்களை வெளி­யிட்டு வந்­த­வரான கஷோக்கி  தூத­ர­கத்­திற்குள் வைத்து  வெட்டிக் கொல்­லப்­பட்ட பின்னர் அவ­ரது சடலம் துண்­டு­க­ளாக்­கப்­பட்டு அங்­கி­ருந்து அகற்­றப்­பட்­ட­தாகவும் துருக்கி தெரி­வித்­தி­ருந்­தது.

இதேவேளை கஷோக்கி இறந்­தமை தொடர்பில் சவூதி அரே­பியா  முதல் தட­வை­யாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை, துருக்­கிய இஸ்­தான்புல் நக­ரி­லுள்ள சவூதி தூத­ர­கத்தில் இடம்­பெற்ற கைக­லப்­பொன்றில் அவர் உயி­ரிழந்­துள்­ள­தாக சவூதி கூறு­யுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பாக துக்கி நாட்டின் ஆளும் கட்சியின் செய்தியாளர் ஒமர் செலீக் கூறுகையில்,

இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமான முறையில் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட செயல்.

அந்த உண்மையை மூடி மறைப்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை வெறும் யூகமாகவே வைத்திருக்க துருக்கியால் முடியாது. கசோக்கி படுகொலை விவகாரத்தில் சவூதி அரேபியாவுடன் நாங்கள் சமரசம் செய்து கொண்டால், அது நீதிக்குப் புறம்பானது எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22
news-image

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுற்றுலாப்பயணி பொதுமக்களால் தாக்கப்பட்டு...

2024-06-21 22:09:05
news-image

வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா...

2024-06-21 15:24:57
news-image

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது...

2024-06-21 13:18:28
news-image

இந்திய - இலங்கை சர்வதேச கடல்...

2024-06-21 14:09:55
news-image

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின்...

2024-06-21 10:40:21
news-image

டெல்லியில் வெப்ப அலை தாக்கத்துக்கு வீடு...

2024-06-21 10:33:26
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக...

2024-06-20 15:01:44
news-image

ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்றைய நாடு...

2024-06-20 13:29:41
news-image

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது...

2024-06-20 11:39:04