இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியான விமல் நந்திக திஸாநாயக்க சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்று வரும் கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான நிதியை தனிப்பட்ட ஒருவரின் கணக்குக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட குற்றச் சாட்டின் பேரிலேயே இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஒளிபரப்பு நிறுவனத்தினால் வழங்கப்படவிருந்த 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையே இப்படி தனிப்பட்ட கணக்குக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.