இருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு- 20 போட்டியின் இலங்கைக்கான அணித் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்குமான ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கை அணி விபரம் வருமாறு,

திஸர பெரேரா - அணித் தலைவர், டினேஸ் சந்திமல், நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் சாணக்க, கமிந்து மென்டிஸ், இசுரு உதான, லசித் மலிங்க, துஷ்மந்த சாமிர, அகில தனஞ்சய, கசுன் ராஜித, நுவான் பிரதீப், லக்ஷன் சந்தகன், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.