புத்தளம் அறுவைக்காடு பிரதேசத்தில்  குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டித்து பலதரப்பட்ட வழிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன.

எனினும் இன்றுவரை தீர்வு கிடைக்காத காரணத்தினால் அடுத்தகட்டமாக புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளை சந்தித்து நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமாறு பாராளுமன்றத்தில் வாதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை சர்வமத ஒன்றியம் ஏனைய அமைப்பினர்களுடன் இணைந்து முன்னெடுக்க உள்ளதாக புத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் இந்துமத தலைவர் சுந்தரராம குருக்கள் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவோடு குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் எனவும், பிற்காலத்தில் மக்களுக்கு இன்னல்கள் வருமாயின் மக்களின் நலனுக்கான பொறுப்பினை அமைச்சு ஏற்கும் எனுவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க றணவக்கவின் பிரதானி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.