(எம்.மனோசித்ரா)

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை அரசியலமைப்புச் சபை ஒன்று கூடவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற ஊடக செயளாலர் சமிந்த கமகே, இதன் போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

எதிர்வரும் 27 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். எனவே அதற்கு முன்னர் பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட சிவில் பிரதிநிகளின் நியமனத்துக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

அத்தோடு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் இம்மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனவே 19 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தின் பிரகாரம் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் வரையில் தற்போதைய உறுப்பினர்கள் பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.