பருத்தித்துறை நவீன சந்தையின் மேல் தளத்தில் இயங்கிவரும் மரக்கறிசந்தையை கீழ்த்தளத்திற்கும் மாற்றுவதற்கென எடுப்பட்ட தீர்மானத்திக்கு எதிராக சபைத்தவிசாளர் செயல்படுகின்றார் எனக் குற்றம் சாட்டி பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பருத்திதுறை நகரசபையின் மாதாந்த கூட்டம் தவிசாளர் யோ. இருதயராஜா தலமையில் நடைபெற்றது.

கூட்டம் முடிவடையும் கட்டத்தை நெருங்கிய போது மரக்கறிச்சந்தையை கீழ்த்தளத்திற்கு மாற்ற பொதுமக்கள் கல்விமான்கள் புத்திசாலிகள் விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கபப்பட்டபோதே தமிழ்தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் ஆட்ஷசேபித்து முன்னர் எடுத்த தீர்மானத்தை நடை முறைப்படுத்துமாறு வலியுறுத்தினார்கள் இது தொடர்பாக சந்தை வியாபாரிகளையும் அழைத்து உரையாடுவோம் என தவிசாளார் தெரிவித்தார்.

எனினும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் இறுதியில் தாம் வெளிநடப்பு செய்யபோவதாக தெரிவித்து முன்னனியின் உறுப்பினர் கே. பாலசுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை தவிசாளரிடம் கையளித்து விட்டு வெளியேற, உறுப்பினர்கள் ப. சுரேஸ்  வின்சன்டிபோல் சு.கோகுலகுமார் எஸ் கமல் இளவரசி ஆகிய உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வெளிநடப்பு செய்தனர்

தமிழ்தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் வெளியேறி போதிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஈ.பி.டி.பி தமிழ் விடுதலை கூட்டணி மற்றும் சுயேடசைக்ககுழு உறுப்பினர்கள் ஒருவர் உட்பட தவிசாளர் சேர்த்து 9 உறுப்பினர்ளுடன் கூட்டம் இடம் பெற்று மரக்கறிசந்தை தொடர்பான தீர்மானத்துடன் கூட்டம் நிறைவுககு வந்தது.

குறிப்பிட்ட தீர்மானத்தில் சந்தை வியாபாரிகள் அனைவரும் அழைத்து புத்தி ஜீவிகள் கல்விமானக்கள் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் மரக்கறி சந்தை தொடர்பாக வழக்கு விபரங்களையம் எடுத்து கூறி அவர்களின்க கருத்துக்களின் முடிவில் ஒரு தீர்மானத்தை எடுப்பது எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.