(எம்.மனோசித்ரா)

சிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமைகள் என அனைத்தையும் சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , அன்று மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போலியான பிரசாரங்கள் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் கூட ஐ.நா அமைதி காக்கும் படைக்கு இராணுவனத்தினரை அனுப்பியிருந்தோம். ஆனால் இன்று ஆப்பிரிக்க வலய நாடுகளில் ஒன்றான மாலியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவரை ஐ.நா திருப்பி அனுப்பியுள்ளது. இதுவே அரசாங்கம் உலகை வெற்றிக்கொண்ட விதம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

கோட்டையில் இடம்பெற்ற எலிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.