அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் 50 சிறைக்கைதிகள் ஈடுபட்டனர்.

பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் வெளிப்புற பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அவர்கள் சிறைச்சாலையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதுடன், வெளிப்பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டமானது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.