பெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்

Published By: J.G.Stephan

22 Oct, 2018 | 01:06 PM
image

முகப்புத்தகத்தின் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அழகாக இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை முகப்புத்தகத்தின் முகப்படமாக பதிவிட்டு, பல இளம் பெண்களை ஏமாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருவதாவது,

இந்த சந்தேக நபர் நுவரெலியாவை சேர்ந்த 26 வயதான இளைஞன் எனவும் அவர் பல பெண்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அழகாக இளைஞனின் புகைப்படங்களை முகப்புத்தகத்தின் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதற்கு தனது தொலைபேசி இலக்கத்தையும் இணைத்துள்ளார். பின்னர் பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து பின்னர் அவர்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது ஆபாச இணையத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

சந்தேக நபர் பின்னர் அந்த பெண்களை சந்திக்க வேண்டும் என கூறி ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளார். அவ்வாறு ஹோட்டல் வர விரும்பாத பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக அச்சுறுத்தி ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பிலுள்ள ஆடை கடைகளில் தொழில் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும், குறித்த நபர், இளம் யுவதிகளை ஹோட்டல்களுக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டில் தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தவறில்லை, ஆனால் பெண்கள் இது தொடர்பான விடயங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்பது முக்கியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56