இலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட்  போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.

இலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட்  போட்டியையடுத்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் இங்கிலாந்து உடனான ஒருநாள் போட்டியினைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் காலியில் இடம்பெறவுள்ள முதலாவது  டெஸ்ட் போட்டியினையடுத்தே ஓய்வு பெறவுள்ளதாக ஹேரத் அறிவித்துள்ளார் .

காலி விளையாட்டு மைதானமானது ஹேரத்துக்கு பரீட்சயமான பந்துவீச்சில் பிரகாசிக்க வைத்த மைதானமாக கருதப்படுகின்றது.

அங்கு அவருக்கு மேலும் ஓர் விக்கெட் கிடைக்கப்பெற்றிருந்தால் அவர் முத்தையா முரளிதரனின் 100 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்கும் சாதனை உள்ளது.

அத்தோடு தனது 31 ஆவது வயதில் கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி காலி மைதானத்தில் தனது பெயரை முத்திரை பதித்தார்.

தற்போது 40 வயதை கடந்துள்ள ஹேரத் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக  இடம்பெற்ற 3 டெஸ்ட் தொடர்களினும் முழுமையாக விளையாடவில்லை. இதில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட்கள் மிக முக்கியமானவையாகும்.

முத்தையா முரளிதரனின் ஓய்வுக்கு பின்னர் ஹேரத்தின் வருகை இலங்கை அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்தாலும் அவருக்கு இடையிடையே ஏற்பட்ட உடல் உபாதைகள் காரணமாக பல நல்ல வாய்ப்புகள் கை நழுவி போயுள்ளன.

ஹேரத்தின் ஓய்வையடுத்து டில்ருவான் பெரேராவின் வருகை இங்கிலாந்து அணியுடனான தொடருக்கு சிறிது பலமாக அமையலாம். 

அத்தோடு இலங்கை அணி மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில்  அகில தனஞ்சய,லக்ஸ்மன் சந்தகன், மிலிந்த புஸ்பகுமாரா ஆகியோரின் விருகை இலங்கை அணிக்கு  மேலும் பலம் சேர்க்கும்.

இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரகாசித்த முதல் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றார்.