பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில் பயணித்துக் கொண்டிருந்த இரு பஸ்கள் திடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு மேலும் 40 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்