மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

29 வயதாகும் விராட் கோலி நேற்று பெற்றுக் கொண்ட சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 60 சதங்களை நிறைவு செய்துள்ளார். அதன்படி டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 36 சதங்களையும் விளாசித் தள்ளியுள்ளார்.

இதற்காக அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 124 இன்னிங்ஸுக்குளும், ஒருநாள் போட்டியில் 204 இன்னிங்ஸுக்களும், இருபதுக்கு 20 போட்டிகளில் 58 இன்னிங்ஸுக்களும் உள்ளடங்களாக மொத்தம் 386 இன்னிங்ஸுக்கள் தேவைப்பட்டது.

இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸுக்களில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். 

ஏற்கனவே, 426 இன்னிங்ஸுக்களில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்.

இந் நிலையில் விராட் கோலி இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 6331 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 9919 ஓட்டங்களையும், இருபதுக்கு 20 போட்டிகளில் 2102 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.