சவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  தெரி­வித்தார்.

கஷோக்கி இறந்­தமை தொடர்பில் சவூதி அரே­பியா  முதல் தட­வை­யாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஒப்­புக்­கொண்­டி­ருந்­தது.

துருக்­கிய இஸ்­தான்புல் நக­ரி­லுள்ள சவூதி தூத­ர­கத்தில் இடம்­பெற்ற கைக­லப்­பொன்றில் அவர் உயி­ரிழந்­துள்­ள­தாக சவூதி  கூறு­கி­றது.

கஷோக்கி துருக்­கி­யி­லுள்ள மேற்­படி தூத­ர­கத்­திற்குள்  பிர­வே­சித்தவேளை காணாமல் போயி­ருந்த நிலையில்  அவர் அந்தத் தூத­ர­கத்­திற்குள் வைத்துப் படு­கொலை செய்­யப்­பட்­ட­தற்­கான சான்­றுகள் தம்­மிடமுள்­ள­தாக  துருக்­கிய அதி­கா­ரிகள் ஏற்­க­னவே உரி­மை­கோ­ரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

சவூதி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கருத்­து­க்களை வெளி­யிட்டு வந்­த­வரான கஷோக்கி  தூத­ர­கத்­திற்குள் வைத்து  வெட்டிக் கொல்­லப்­பட்ட பின்னர் அவ­ரது சடலம் துண்­டு­க­ளாக்­கப்­பட்டு அங்­கி­ருந்து அகற்­றப்­பட்­ட­தாக துருக்கி தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில்  தூத­ர­கத்­தி­லான கைக­லப்பில் கஷோக்கி கொல்­லப்­பட்­ட­தாக  சவூ­தியால் தெரி­விக்­கப்­பட்ட பதிலில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

இதன் பிர­காரம் சவூ­திக்கு எதி­ராக தடைகள் விதிக்­கப்­படும் சாத்­தி­யப்­பாடு  உள்­ள­தாக கூறிய  டொனால்ட் ட்ரம்ப், ஆனால்  சவூதி அரே­பி­யா­வு­ட­னான  ஆயுத உடன்­ப­டிக்­கையை நிறுத்­து­வது அவர்­களை விடவும்  அமெ­ரிக்­கர்­க­ளையே  பாதிக்கும் எனத் தெரி­வித்தார்.

அதே­ச­மயம் இந்தப் படு­கொலை தொடர்பில் சவூ­தியின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் அறி­யா­தி­ருப்­ப­தற்கும் சாத்­தி­யப்­பாடு உள்­ள­தாக  அவர் கூறினார்.

சவூதி அரே­பியா கடந்த வெள்ளிக்­கி­ழமை வரை காணா­மல்­போன கஷோக்­கிக்கு என்ன நடந்­தது என தனக்குத் தெரி­யாது என்றே சாதித்து வந்­தது. அவர் அந்தத் தூத­ர­கத்­தி­லி­ருந்து   உயி­ருடன் வெளி­யே­றி­யி­ருந்­த­தாக அந்­நாடு வாதிட்டு வந்­தி­ருந்­தது.

தற்­போது கஷோக்கி மர­ண­ம­டைந்­துள்­ளதை  ஏற்­றுக்­கொண்­டுள்ள சவூதி அரே­பியா,  துருக்­கி­யி­லுள்ள தூத­ர­கத்­திற்குள்  கஷோக்­கியை எதிர்­கொண்­ட­வர்­க­ளுடன்  இடம்­பெற்ற கைக­லப்­பி­லேயே அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக  தெரி­விக்­கி­றது.

இந்தப் படு­கொலை தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக  தெரி­விக்கும் சவூதி அரே­பியா,  அத­னுடன் தொடர்­பு­பட்ட 18  பேரைக் கைது­செய்­துள்­ள­தாக கூறு­கி­றது.

கஷோக்­கியின்  உடல் உள்­நாட்டைச் சேர்ந்த ஒரு­வ­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட பின் அந்த உட­லுக்கு என்ன நடந்­தது என்­பதை சவூதி அதி­கா­ரிகள் அறி­யா­துள்­ள­தாக  பெயரை வெளி­யிட விரும்­பாத அதி­கா­ரிகள் ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரி­வித்­துள்­ளனர்.

மேற்­படி விவ­காரம் குறித்து இந்தக் கைது­க­ளுக்கு மேல­தி­க­மாக   பிரதிப் புல­னாய்வுத் தலைவர் அஹ்மட் அல் அஸ்­ஸிரி மற்றும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானின்  சிரேஷ்ட உத­வி­யா­ள­ரான சவுத் அல் கஹ்­தானி ஆகிய  இரு அதி­கா­ரிகள்  பணி­நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்கல் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவால்  அளிக்­கப்­பட்ட விளக்கம் சரி­யான முறையில் அமை­ய­வில்லை எனக் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் பல கேள்­வி­க­ளுக்கு இன்னும் பதி­ல­ளிக்­கப்­ப­டா­துள்­ள­தாக    பிரான்ஸ் வெளி­நாட்டு அமைச்சர்  ஜீன் கிளோட் தெரி­வித்­துள்ளார்.

அது மோச­மான  செயற்­பாடு எனவும் இந்தப் படு­கொ­லைக்குப் பின்­னா­லுள்­ள­வர்கள் பொறுப்­புக்­கூற வைக்­கப்­பட வேண்டும் எனவும்  பிரித்­தா­னிய வெளி­நாட்டு செய­லா­ளரின் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்தப் படு­கொலை குறித்து முறை­யான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள ஐக்­கிய நாடுகள் சபையும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்க்ள உட்­பட  அமெ­ரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சவூதிக்கு எதிராக கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அதேசமயம் அவுஸ்திரேலியாவானது  சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள முதலீட்டு உச்சிமாநாடொன்றிலிருந்து  வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

கஷோக்கி விவகாரம் குறித்து  அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் ஏற்கனவே இந்த உச்சிமாநட்டைப் பகிஷ்கரிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.