தற்போதைய யுகத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது பெரும் சிக்கலானதாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய திரையை பிரித்தானிய அறிவியல் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். 

வாரத்தில் ஒருமுறை மாத்திரம் சார்ஜ் செய்துகொண்டால் வாரம் முழுக்க பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய திரையை நமது ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லெட் உள்ளிட்டவைகளில் பொருத்துவதன் மூலம் பேட்டரிகளின் ஆயுளை நீடிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய திரைக்கு மின்சார இணைப்பு தேவையில்லை என்பது சிறப்பு ஆகும்.