கொலைச் சதி  விவகாரம் குறித்து  பணி இடை நிறுத்தம் செய்யப்பட் டுள்ள  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ  ஆகியோரை கொலை செய்ய சதித் செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறபப்டும் விவகாரம் தொடர்பில்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

அதற்கிணங்க கடந்த வாரத்தின் வியாழனன்று 9 மணி நேரமும், வெள்ளியன்று 10 மணி நேரமுமாக 19 மணி நேரம் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ள  நாலக டி சில்வாவை இன்று காலை 9.15 இற்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் ஊடாக அவருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.