கிரிக்கெட்  உலகின் பல பிரபல வீரர்கள் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டதாக அல்ஜசீரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இங்கிலாந்து அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தானை சேர்ந்த வீரர்கள் ஸ்பொட்பிக்சிங்கில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

2011 முதல் 2012 வரை ஆட்ட நிர்ணய சதிகள் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஆட்டநிர்ணயசதியில் ஈடுபடும் நபர் ஒருவர் ஆட்டநிர்ணய சதி தொடர்பில் முக்கிய புள்ளி என கருதப்படும் நபர் ஒருவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை அடிப்படையாகவைத்தே அல்ஜசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய நபர் தனது தொலைபேசி உரையாடலில் 14 போட்டிகள் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட போட்டிகளி;ல் நிகழக்கூடிய 26 சூழ்நிலைகள் குறித்து எதிhவுகூறலை வழங்கியுள்ளார் எனினும் இவற்றில் ஒன்று மாத்திரமே சாத்தியமாகியுள்ளது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த  வீரர்கள் சிலர் ஏழு போட்டிகளில் ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டனர் அவுஸ்திரேலிய வீரர்கள் ஐந்து போட்டிகளிலும்,பாக்கிஸ்தானை சேர்ந்த வீரர்கள் மூன்று போட்டிகளிலும் ஸ்பொட் பிக்சிங்கிலும் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

ஏனைய அணிகள் ஆகக்குறைந்தது ஒரு போட்டியிலாவது ஸ்பொட்பிக்சிங்கில் ஈடுபட்டனர்  எனவும் அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் லோர்ட்சில் இடம்பெற்ற போட்டி,கேப்டவுனில் தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியாவிற்கு இடையில் இடம்பெற்ற போட்டி பாக்கிஸ்தானிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற போட்டிகள் ஆகியவற்றில் ஸ்பொட் பிக்சிங் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற ரி 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஸ்பொட் பிக்சிங் முயற்சிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.