தாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுயாமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

தாய்வானின் தைபெய் நகரிலிருந்து டைட்டுங் நகரை நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலே இன்று மாலை சுமார் 5 மணியளவில் க்சின்மா ரயில் நிலையத்தின் அருகேயுள்ள டுங்ஷான் பகுதியை நெருங்கியபோது தண்டவாளத்திலிருந்து விலகி தரம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ரயிலின் முன்பகுதியில் இருந்த 8 பெட்டிகள் முற்றிலுமாக சரிந்து விழுந்த நிலையில், பின்னால் இருந்த 5 பெட்டிகள் எதிர்திசையை நோக்கி கிடந்தது.

360- க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த அந்த ரயில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.