லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை பெல்டன் பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தலவாக்கலை  - டயகம பிரதான வீதியின் லிந்துல வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. 

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயம் அடைந்த நிலையில் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்துள்ள மூவரும் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தமது வேலையை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதனையடுத்து  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்