கொழும்பிலிருந்து பதுளை நோக்கி  மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர், பதுளை போகாமடித்தை என்ற இடத்தில்  நடுவீதியில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே பயணித்தனர். இருவரும் காயங்களுக்குள்ளாகிய போதிலும் சாரதி ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பொலிசார் விபத்து குறித்து  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.