பலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்தவிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த நிறை 100 கிலோ கிரேம் என்றும் அதன் மொத்த மதிப்பு சுமார் 8 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட குறித்த கேரள கஞ்சாவானது நீர்கொழும்பு பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.