(எம்.மனோசித்ரா)

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை தொடர்ந்து எரிபொருள் விலை கடந்த மூன்று மாத காலங்களாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. எனினும் அந்த இரகசிய விலை சூத்திரம் தற்போது நிதி அமைச்சினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதனை யாராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக் கட்சியின் பொதுச் செயளாலர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். 

அத்துடன் தற்போது எரிபொருளுக்கான வரி குறைவடைந்துள்ளது. எனினும் எரிபொருள் விலை அதிரிக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இதனால் பொது மக்களே பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.