(நா.தினுஷா)

உடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட  ஐவரை  உடவலவ பொலிசார் கைது  செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர். 

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் உடவலவ பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போதே குறித்த ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 34, 41, 48, 51 மற்றும் 52 வயதுடையவர்கள்  எனவும் இவர்கள் கோமாரினய, உம்பிலிபிடிய, மற்றும் கொழபகேஹர போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடவளவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.