ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்து வருதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தலிபான் தீவிரவாதிகளுடன் இணைந்து ஐ.எஸ் தீவரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றது.

இன்று இரண்டாம் நாள் வாக்குப்பதிவு இடம்பெற்றுவரும் நிலையில், கிழக்கு நங்கர்கார் மாகாணத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் அட்டஹுல்லா கொக்யானி தெரிவித்துள்ளார்.