மஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பிரதேச சபையினால் கடந்த மாதம் முதல் குறித்த வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை அறிமுகம் செய்யப்பட்டது.

இச்சந்தையில் விலை பட்டியல் இல்லை என்றும் மக்களின் நலன் பேணும் நோக்கில் அமைக்கப்பட்ட இச்சந்தையில் மலிவான விலையில் பொருட்களை வாங்க முடியும் என நம்பிய மக்கள் ஏமாற்றம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தை இனிவரும் காலங்களில் சிறந்த முறையில் நடைபெற மஸ்கெலியா பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.