சட்டவிரோதமான முறையில் 195 வெளிநாட்டு சிகரெட் பைக்கெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த இருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 195 சிகரெட் பைக்கட்டுக்களிலுமிருந்து 39 ஆயிரம் சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாக தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் அவற்றின் பெறுமதி 195,000 ரூபாவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று காலை 07 மணியளவில் துபாயிலிருந்து வருகை தந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு சிககெட்டுக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.