வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

யாழிலுள்ள விடுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இக் கட்சி அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கட்சியின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரன் செயற்பட்டுள்ளார். மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் செயலாளர் நாயகத்தினால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.