மாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன் 

Published By: Digital Desk 4

21 Oct, 2018 | 11:41 AM
image

வவுனியா ஆச்சிபுரத்தில்  ஏழை குடும்பம் ஒன்றிற்கு தற்காலிக வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் மாகாணசபை நிறைவடையவுள்ள நிலையில் மாகாண சபையின் செயற்பாட்டில் திருப்தி அடைந்துள்ளீர்களா? என ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து கூறுகையில்,

மாகாணசபை நிறைய நல்ல விடயங்களை செய்திருக்கலாம் இன்றைக்கு மலசலகூடம் இல்லாத கொட்டகைகள் எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்றது. இரண்டு விடயங்கள் சம்பந்தமாக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அபிவிருத்தி என்ற ரீதியிலே மாகாணசபை பெரிய அளவிலேயே செய்யவில்லை எங்களுடைய மக்களுடைய விடுதலை என்ற ரீதியிலே நிறைய விடயங்களை செய்திருக்கின்றன. நிதி தேடுகின்றதில் நடுவன் அரசாங்கத்தை தருகின்ற நிதி காணாது என்பதை கூறி இருக்கிறோமே தவிர நாங்கள் நிதியை தேடவில்லை. 

இந்திய அரசாங்கம் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்ற இந்த அரசாங்கங்களிடம் நேரே சென்று முதலமைச்சரோ, அமைச்சர்களோ இந்த நிதியை தேடி அந்த நிதியின் ஊடாக நிறைய விடயங்களை சாதிக்கவில்லை சாதித்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

ஆகவே இரண்டு விடயங்கள் அடுத்தது என்ன என்று கூறினால் நாங்கள் கூறுகின்றோம் ஒற்றுமையாக வரவேண்டும் ஒற்றுமையாக வரவேண்டும் என்று இந்த ஒற்றுமையாக கூடுதலாக ஆசனங்களை பெற்று ஆட்சிபீடத்தில் ஏறிய நாங்களே ஒற்றுமையாக உள்ளுக்குள் இருக்கவில்லை. அது ஒரு பெரிய சாபக்கேடு. எங்களுக்குள்ளே அடிபட்டு எங்களுடைய அரசாங்கத்திற்குள் எதிர்கட்சி அமைதியாக இருக்கின்ற சூழல் இந்த மாகாண சபையிலே காணப்பட்டது. 

இனிவரும் காலங்களில் இப்படியான விடயங்களை நாங்கள் இந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். என்னை பொறுத்தமட்டில் மக்களுடைய எதிர்பார்ப்பு இந்த மாகாண சபை தான் எங்களுக்கு ஏதாவது செய்யும் அடிப்படை  போரினால் பாதிக்கப்பட்ட எங்களுடைய மக்கள் அவர்களுக்குள்ள தேவைகள் இந்த அம்மாவை பார்த்தம் என்று சொன்னால் ஒரு வசதியும் இல்லாமல் இருக்கின்றார். 

முதல் அபிவிருத்தி செய்ய வேண்டும் எங்களுடைய அரசாங்கம் என்று கூறியே வாக்கினை போட்டார்கள். முதல் தன்மை என்பதனால் சில தவறுகளும் உள்ளன. சில சரிகளும் உள்ளன. ஆனால் இந்த அனுபவங்களைக் கொண்டு வருகின்ற அரசாங்கம் எங்களுடைய மக்கள் நிதிகளை தேடுவதற்கான இலங்கை அரசாங்கம் தருகின்ற நிதிகளை வைத்துக்கொண்டு நடத்த முடியாது. ஏனென்றால் எங்களுக்கு நிதி கூடுதலாக தேவையாக உள்ளது. 

ஆகவே இங்கு வருகின்ற எங்களுடைய புலம்பெயர் உறவுகளுக்கு வியாபார ரீதியாக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் அப்படி கொஞ்சம் செய்திருக்கின்றோம் ஆனால் உலக நாட்டில் இருக்கின்ற அயல் நாடாக இருக்கின்ற இந்தியா, பிரித்தானியா, கனடா இன்று பார்த்தோம் என்றால் ஒவ்வொரு  உயர்ஸ்தானிகர் ஆலயங்களும் தங்களுடைய சொந்த வேலையாக தண்ணீர் கொடுப்பதற்காக பாரியளவு நிதி கொடுத்து இருக்கிறார்கள். அமெரிக்கா அப்படி கொடுத்திருக்கிறது ஒவ்வொரு வேளையும் தங்களுடைய செயற்பாடுகளை செய்கிறார்கள். இந்த நிதியை அரச முதலமைச்சராக அல்லது மாகாணசபை அரசாங்கம் அவருடைய அந்த அரச தலைவர்களை சந்திக்க வேண்டும். பிரதமரை சந்திக்க வேண்டும். அவர்களிடமிருந்து நிதியை பெற வேண்டும்.

நேரடியாக நிறைவேறுவதாக இருந்தாலும் அதனை எங்களுக்காக அது நடுவன் அரசினூடாக  முழு பணத்தையும் கிடைக்கின்ற அந்த செயற்பாட்டை நாங்கள் செய்து எங்களுடைய மக்களை தூக்கிவிட வேண்டும்  என்னென்று சொன்னால் இந்த ஒவ்வொரு அமைச்சர்களுடைய காரியாலயங்களிலும் எங்களுடைய மக்கள் நிறைந்து நிற்கின்றார்கள், நிறைந்து வழிகிறார்கள் என்று சொன்னால் அவர்களிடம் குற்றமில்லை. 

ஏன் என்று சொன்னால் அவர்களுடைய தேவை நிறைய இருக்கின்றது. இன்று அவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அமைச்சர்களால் முடியும் என்ற நிலையில் அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதனை நாங்கள் நிறுத்தி செயற்பட வேண்டும் என்று சொன்னால் எங்களுடைய மாகாணசபை வடிவாக திட்டமிட்டு செயற்பட வேண்டும் என  மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02