புத்தளம் - மகவெவ பிரதேசத்தில், இளைஞர்களை திருமணம் செய்து இத்தாலி வீசா பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறித்த வந்த குழுவை நாத்தாண்டியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பணத்தை கொடுத்து ஏமாற்றம் கண்ட இளைஞர் ஒருவரின் முறைப்பாட்டிலேயே, குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞனை அக் குழுவிலுள்ள ஒரு பெண் திருமணம் செய்து, வீசா பெற்றுத் தருவதாக 8 இலட்சம் வாங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும் குழுவின் தலைவியாக ஒரு பெண் செயற்பட்டதாகவும்,  விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் நாத்தாண்டியா பொலிஸார் தெரிவித்தனர்.