நுவரெலியா குதிரை பந்தய திடலில் பராமரிப்பை நடைமுறையில் உள்ள தனியார் கம்பனியிடம் இருந்து இதற்கு முன்னர் பராமரிப்பை மேற்கொண்ட குறித்த ஒரு நிறுவனத்தின் மேற்பார்வைக்கு ஒப்படைப்பதை எதிர்த்து இன்று 200ற்கும் மேற்பட்ட குதிரை பந்தய திடல் சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டம் நுவரெலியா குதிரை பந்தய திடலின் அருகில் உள்ள மத்திய வங்கி கட்டிடத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள ரோயல் தனியார் நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்க இடம் கொடுக்குமாறு பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷம் எழுப்பப்பட்டு ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது. 

(க.கிஷாந்தன்)