இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நண்பகல் 1:30 மணிக்கு கவுகாத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றி அபாரமாக வெற்றயீட்டியது.

இந் நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்திலும் சரி பந்து வீச்சுலும் சரி களத் தடுப்பிலும் சரி அனைத்து வகையிலும் வல்லமை பெற்றே திகழ்கிறது.

மறுமுணையில் ஜோசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்திய அணியை பொறுத்தவரையில் ஒருநாள் போட்டியில் சிறப்பாக  விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று களமிறங்கவுள்ள இந்திய அணிக் குழாமில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், டோனி, ரி‌ஷப் பண்ட், மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், சாதல், முகமது சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கலீல் அகமது ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவு அணிக் குழாமில் ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், சாமுவேல்ஸ், லீவீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால், ஹேம்ராஜ், ஆலன், பிஷூ, ஜோசப், நர்ஸ், கீமோபவுல், ரோவன் பாடுவல், கேமர் ரோச், தாமஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இவ் விரு அணிகளும் இதுவரை 121 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மேற்கிந்திய அணி 61 போட்டிகளிலும், இந்திய அணி 56 போட்டிகளிலும், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றியும், 3 போட்டி எதுவிதமான முடிவுகளின்றியும் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.