வவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது  நேற்று மாலை 2600 போதை வில்லைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றினை ஓமந்தைப் பகுதியில் வழிமறித்த பொலிசார் சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை வில்லைகளை மறைத்து கொண்டுசென்ற 23, 32 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர். 

இவர்களிடமிருந்து 2600 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்நடவடிக்கையின்போது வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேவிக்கிரம தலைமையில் கீழ்   சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி. எஸ். எம். தென்னக்கோனின் வழிநடத்தலில்  ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தலைமையிலான குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓமந்தைப்  பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.