மட்டக்களப்பு, மாவடிஓடை பகுதியில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடிரயனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - பனிச்சையடி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி மனோகரன் (வயது 60 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.