அமைச்சர்  பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ரூபா ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றுது.மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்டத்தில்  மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரத்தின் நிதியிலிருந்து 25 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மஸ்கெலியா மறே தோட்டத்திற்கு 25 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  நேற்று மாலை 4.30 மணியளவில் மறே வட்டாரத்தின் நிழற் பிரதேச சபை உறுப்பினரான அ.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக தொழிலாளர் தேசிய முன்னனியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகணம் திலகராஜ் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், அமைச்சரின் இணைப்புச்செயலாளருமான  கணபதி நகுலேஸ்வரன்  கலந்துக்கொண்டனர்.

இவர்களுடன் மஸ்கெலியா பிரதேச சபையின்  உறுப்பினர்களும், அமைப்பாளர்களும்,இளைஞர்  அணியினரும்,,தோட்ட அதிகாரிகள் உட்பட தோட்ட உத்தியோகஸ்தர்களும்,ட்ரஸ்ட் நிறுவண அதிகாரிகளும்,தோட்ட தலைவர்கள், தலைவிகளும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.