மாளிகாவத்தை – ஜூம்மா மஸ்ஜித் வீதியில் சற்று முன்னர் இரு துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 வயது இளைஞனே துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் மீது கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி மாளிகாவத்தை “லக் செத செவன” குடியிருப்புக்கருகில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வந்த நிலையிலேயே இன்று மீண்டும் குறி வைக்கப்பட்டுள்ளார்.