பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்,  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இன்று புதுடில்லியில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பில் இரு நாட்டு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அரசின் நிதியுதவியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

சந்திப்பின் இறுதியில் பிரதமர் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.