மாணவர்களை இலக்கு வைத்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும், போதைப்பொருள் கலக்கப்பட்ட பாபுல்களை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இந்த பாபுல், மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.