வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் இன்று வீடு கையளிக்கப்பட்டது.

முன்னர் வசித்து வந்த வீடு மண்ணினால் கட்டப்பட்ட  மழைக்கு இடிந்து விழும் நிலையில் காணப்பட்டமையினால் அம்மா அறக்கட்டளை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஜேர்மன் மகளீர் அமைப்பினரின் ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா நிதியில் இவ் தற்காலிக வீடு அமைக்கப்பட்டது.

குறித்த வீட்டினை பயனாளிக்கு கையளிக்கும்  இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் து. நடராஜசிங்கம் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் , அம்மா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.