அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத் திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிஸாம்தீன் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டில் மொஹமட் நிஸாம்தீனை சிக்க வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.