இந்தியாவிற்கு பயணித்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். 

குறித்த  சந்திப்பின்போது இந்தியா  மற்றும் இலங்கைக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.