மாலியில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் தளபதியை நாட்டிற்கு திருப்பியழைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பபத்து தெரிவித்துள்ளார்.

மாலியில் மாலியில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் தளபதி கலன அமுனுபுரவை இலங்கைக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள்  விடுத்துள்ள உத்தரவினை தொடர்ந்தே குறிப்பிட்ட இராணுவ அதிகாரியை மீள அழைத்துக்கொள்ளவுள்ளதாக இராணுவபேச்சாளர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

கலன அமுனுபுர குற்றமிழைக்கவில்லை என நிருபித்த பின்னர் மீண்டும் அவரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் காரணமாக் ஐக்கியநாடுகளிற்கும் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள  இலங்கை படையினரிற்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாலியில் ஐக்கியநாடுகள் அமைதி;ப்படையில் அங்கம் வகிக்கும் இலங்கை படையினரின் தளபதியை உடனடியாக  இலங்கைக்கு திருப்பியழைக்குமாறு ஐநா இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சேர்ந்த இராணுவ அதிகாரியான கலன அமுனுபுர என்பவரை மாலியிலிருந்து  வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகள்  பேச்சாளர்  ஸ்டீபனே துஜாரிக் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவ அதிகாரியின் கடந்த கால மனித உரிமை மீறல்களின் அடிப்படையிலேயே அவரை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஐநா பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகவைத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்