பனிக்கன்குளம் பகுதியில் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவனை தாக்கிய இ. போ. ச. சாரதி மாங்குளம் பொலிஸாரால் கைது.

நேற்று முன்தினம் பனிக்கன்குளம் பகுதியில் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவனைத் தாக்கிய சாரதியை மாங்குளம் பொலிஸார் சற்று முன்னர் கைதுசெய்துள்ளனர்

குறித்த விடம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

நேற்று  முன்தினம் பனிக்கன்குளம் பகுதியில் பஸ்தரிப்பு நிலையத்துக்குள் வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவன் ஒருவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். 

 இதனை தொடர்ந்து மாணவரின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது .

 குறித்த சாரதியை இன்று பொலிஸ் நிலையத்திற்கு வருகைதருமாறு அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

 இருப்பினும் பொலிஸார் மீது நம்பிக்கையற்ற மக்கள் சாரதியை கைது செய்யும் முகமாக இன்று காலை பனிக்கன்குளம் சந்தியில் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மின்னல் இளைஞர்கழக உறுப்பினர்கள் ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொது மக்கள் ஒன்று சேர்ந்து பருத்துத்துறை பஸ் நிலையத்துக்குரிய கொழும்பு செல்லும் பஸ் NP8859 ஜ வழிமறித்து நிறுத்திய போது அவ்விடத்துக்கு வந்த பொலிஸாரால் பஸ்ஸை வெளியேற அனுமதித்தாலும் பஸ் அந்த இடத்தை விட்டு வெளியேறி சென்றமையால் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக தகவலை தெரிவித்து மாங்குளத்தில் மறித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் கடமையாற்றிய சாரதி மற்றும் நடத்துனர் இன்மையால் அவர்கள் பொலிஸ் நிலையம் வருவதாக தகவல் வழங்கப்பட்டமையால் பஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பொலிஸ் நிலையம் சென்ற சாரதியை தற்போது மாங்குளம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் 

விசாரணைகளில் மாணவர்கள் பஸ்ஸின் மீது கல் எரிய முற்பட்டதால் தாக்கியதாக சாரதி தெரிவித்துள்ளார் 

எது எவ்வாறிருப்பினும் ஏ 9 வீதியில் கிழவன்குளம் பனிக்கன்குளம் மாணவர்கள் மாங்குளம் பாடசாலை செல்ல பஸ்கள் தம்மை ஏற்றுவதில்லை எனவும் பாடசாலைக்கு தாமதமாக சென்று தண்டனைகளை அனுபவிப்பதாகவும் தெரிவிப்பதோடு பல நூற்றுக்கணக்கான பஸ்கள் குறித்த வழியாக சென்றாலும் பாடசாலை மாணவர்கள் மக்களை ஏற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றமையும் தமக்கான பாடசாலை சேவையை வழங்குமாறும் பல அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் கோரிக்கை வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.