பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்வு கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இன்று காலை பதுளை நுழைவாயிலில் ஹாலி - எல என்ற இடத்தில் பாரிய வீதி மறியல் போராட்டமும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும் நடைபெற்றது. 

  

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்  தொழிலாளர்களோடு தொழிலாளியாக வீதியில் அமர்ந்து ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அத்தோடு மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் “கம்பனிக்கு கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்திற்கு பாரம் கொடு” ,“தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா கொடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.