(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயளாலர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

நாட்டில் வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளமை, எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, சிங்கப்பூர் எட்கா உள்ளிட்ட நாட்டை தாரை வார்க்கும் ஒப்பந்தங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், திருகோணமலை எண்ணை தாங்கிகள் உள்ளிட்ட தேசிய வளங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயளாலர் டில்வின் சில்வா தெரிவித்தார்.