மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கடந்த 18 ஆம் திகதி ஷெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடித்தத்தைக் கையளித்ததாக பணிப்பாளர் குழுவின் செயலாளர், சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் ரொஹான் பத்திரனகே தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவில் 6 பேர் மட்டுமே அங்கத்தவர்களாகவுள்ள நிலையில் குழுவின் உறுப்பினரான கிரிஷ் ராஜேந்திரனின் பதவிக்காலமும் நீடிக்கப்படவில்லை.