மஸ்கெலியா நகரை அழகுடன் பாதுகாப்போம் என்ற சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் யோகேந்திரனால் இன்று  20ஆம் திகதி காலை 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.

 இதன்போது பொது சுகாதார அதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரியுடன் வர்த்தக நிலையங்களுக்கும் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுற்று சூழலை சுத்தமாக வைத்திருப்போம் என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வடிகால்களில் குப்பைகளை போடாமல் குப்பைகளை வகைப்படுத்தி பிரதேச சபை நகர சுத்திகரிப்பு பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறும் பொது மலசல கூடத்தை சுத்தமாக வைத்திருப்போம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயற்திட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.