தளபதி விஜய் நடித்திருக்கும் ‘ சர்கார் ’படத்தின் டீஸர் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியானது. வெளியான இரண்டரை மணி நேரத்திற்குள் ஏழு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, தீபாவளியன்று வெளியாகவிருக்கும் சர்கார் படத்தின் டீஸர் , விஜயதசமி நன்னாளை முன்னிட்டு நேற்று மாலை ஆறு மணியளவில் இணையத்தில் வெளியானது.

வெளியான இரண்டரை மணி நேரத்திற்குள் ஏழு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து சாதனையை படைத்திருக்கிறது.

இந்த டீஸர் தளபதி விஜய் கொர்ப்பரேட் மான்ஸ்டர் என்று வரலட்சுமி சரத்குமாரை பேச வைத்திருப்பதும், விஜய் ‘நான் ஒரு கொர்ப்பரேட் கிரிமினல்’ என்று சொல்வதும் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பிற்கு ஆளாக்கியிருக்கிறது.

இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.